News September 27, 2024
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (27.9.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
Similar News
News January 3, 2026
ராணிப்பேட்டையில் வாக்காளர் சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை 1,247 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தியடையும் இளைஞர்கள் மற்றும் விடுபட்ட தகுதியுள்ளவர்கள் முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News January 3, 2026
அரக்கோணம்: தீ விபத்தில் பள்ளி மாணவன் பலி!

அரக்கோணம் அடுத்த வளர்புரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் செல்வகுமார் (11) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன் வீட்டின் அருகே உள்ள கால்வாயில் மீன் பிடித்து, அதனை சுடுவதற்காக கட்டைகளை அடுக்கி மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பை பற்ற வைத்த போது, தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
News January 3, 2026
ராணிப்பேட்டை: இலவச மாதிரி தேர்வு குறித்து அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC GROUP தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு (03.01.2026) காலை 10 மணிக்கு இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் புகைப்படம் 2, ஆதார் அட்டை நகல் உடன் தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


