News December 27, 2024
இரவு ரோந்து போலீசாரின் விவரங்கள்
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (டிச.27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 30, 2024
திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்” செல்வது, முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News December 30, 2024
திருப்பத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று (டிச 30) அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி தலைமையில், அண்ணா பல்கலை கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் சீண்டலை கண்டித்தும், திமுக அரசை கண்டித்து கண்டண ஆர்பாட்டம் நடைப்பெற இருந்தது. இதனையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில், அதிமுகவினர் திருப்பத்தூர் நகரில் குவிந்து வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
News December 30, 2024
குடும்ப நடத்த வர மறுத்த மனைவிக்கு வெட்டு; கணவன் கைது
ஓசூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவருக்கும் ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி சேர்ந்த பிரித்தா ஆகிய இருவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் பிரித்தா தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் நேற்று பிரபு தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துள்ளார். அவர் வர மறுத்தால் கத்தியால் வெட்டியுள்ளார். போலீசார் பிரபு கைது செய்தனர்.