News April 3, 2025
இரவு ரோந்து பனி விவரம் போலீசார் வெளியீடு !!

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலைகளில் பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி உடனடி உதவி பெறலாம். பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கையால், சட்டம் ஒழுங்கு மேலும் உறுதியடையும். காவல் என்னை அழைக்கவும் 9884098100
Similar News
News April 5, 2025
மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு வேலைவாய்ப்பு

ராணிப்பேட்டையில் உள்ள எம்.ஆர்.எஃப் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 20-25 வயதுக்குட்பட்டவர்கள் டிகிரி கல்வி தகுதி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000-25,000 வழங்கப்படும். இப்பணிக்கு 100 காலி பணியிடங்கள் உள்ளது. இவ்வேலையில் இணைய விருப்பமுள்ளவர்கள் இந்த <
News April 5, 2025
ஓடும் ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் செயின் பறிப்பு

சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் பால சரஸ்வதி (60), இவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு சப்தகிரி ரயிலில் வந்து கொண்டிருந்தனர். ஏப்ரல் 3 இரவு அரக்கோணம் ரயில் நிலையம் 5வது நடைமேடையில் ரயில் நின்று புறப்படும் போது அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் பால சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். ரயில்வே போலீசில் நேற்று புகார் தெரிவித்தார்.
News April 5, 2025
7 சவரன் செயினை பறித்த சுடிதார் கொள்ளையன்

பனப்பாக்கத்தை சேர்ந்தவர் பள்ளி தலைமை ஆசிரியை அபிதா 49. இவர் வியாழக்கிழமை இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சுடிதார் அணிந்து வந்த கொள்ளையன், அபிதா அணிந்திருந்த ஏழு சவரன் செயினை பறித்துச் சென்றான். இதுகுறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று எஸ்பி விவேகானந்த சுக்லா, டிஎஸ்பி ஜாபர்சித்திக் பார்வையிட்டனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.