News January 2, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜனவரி 2 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

Similar News

News October 14, 2025

ராணிப்பேட்டை: கிரேட் எஸ்கேப்-ஆன தாசில்தார்!

image

ஆற்காடு அடுத்த புது மாங்காட்டில், அக்.11ல் நடத்த கிராம சபை கூட்டத்தில் 100 நாள் திட்ட பணிகளில் ஈடுபட்ட, 60க்கும் மேற்பட்ட பணியாளர்களை, முதல்வர் காணொலியில் பங்கேற்றனர். பின்னர் பணிக்கு திரும்பிய அவர்களின் வருகை பதிவை ஏற்றுக்கொள்ளாமல், அதிகாரிகள் கூலி வழங்க முடியாது என கூறியுள்ளனர். நேற்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவ்வழியாக வந்த ஆற்காடு தாசில்தார் U TURN எடுத்தது சர்ச்சையாகியுள்ளது.

News October 14, 2025

ராணிப்பேட்டை: டிராக்டர் மோதி பள்ளி ஆசிரியை பலி

image

மிட்டப்பேட்டை அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை சாந்தி(48), தலைமை ஆசிரியை செந்தாமரை மற்றும் மாணவிகளுடன் பள்ளியில் இருந்து மெயின் ரோட்டுக்கு நேற்று (அக்.13) பள்ளி நேரம் முடிந்து வந்து கொண்டிருந்தார். இவர்களுக்கு பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் ஆசிரியை சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் தலைமை ஆசிரியை செந்தாமரை மற்றும் 2 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இதனை தாலுகா போலீசார் விசாரித்துவருகின்றனர்.

News October 14, 2025

ராணிப்பேட்டை மாவட்டதில் 17ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 17ம் தேதியன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.முகாமில் 8ம் வகுப்பு முதல் 10ம்,12ம் வகுப்பு,பட்டப்படிப்பு,ஐடிஐ,டிப்ளமோ நர்சிங் மற்றும் பிஇ முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.எனவே வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!