News January 1, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
3,04,886 வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மொத்தமாக 3,04,886 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 337 வாக்குசாவடி நிலைய அலுவலர்களும்,34 வாக்குச்சாவடி நிலையை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்களும், சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து 3-வது சுற்றாக பொதுமக்களுக்கு படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பன்னிரண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர்வதற்கு www.tahdc.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 13, 2025
கள்ளக்குறிச்சி: பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் விஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்த மும்தாஜ் என்பவர் கடந்த 11-ம் தேதி தனது 40 சென்ட் இடத்தை அளவீடு செய்து கல் ஊன்றியுள்ளார். அப்போது அங்கு வந்த, அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், மஞ்சு, ஆனந்த் ஆகியோர், மும்தாஜை, தலையை முடியை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் இன்று (நவ.13) சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


