News December 31, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச 31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

Similar News

News September 17, 2025

ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் செப் 19 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பி.இ படித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!

News September 17, 2025

ராணிப்பேட்டை: ஒரு செயலியில் அத்தனை பிரச்னைகளும் தீர்வு

image

<>”மெரி பஞ்சாயத்து”<<>> மொபைல் செயலி மூலம் கிராம மக்கள் இனி எல்லா விதமான புகார்களையும் நேரடியாகப் பதிவு செய்யலாம். இதில் உள்ள ‘Grievance/Complaint’ பிரிவில் பெயர், கிராமம் மற்றும் புகார் விவரங்களை உள்ளீடு செய்து, தேவையான ஆவணங்களையும் இணைக்கலாம். புகார் செய்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை நேரடியாகக் கண்காணிக்க முடியும். ஷேர்

News September 17, 2025

ராணிப்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

ராணிப்பேட்டையில் இன்று (செப்.17) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ ராணிப்பேட்டை நகராட்சி – லிட்டில் ஸ்டார் மழலையர் தொடக்க பள்ளி, ராணிப்பேட்டை
✅ திமிரி பேரூராட்சி – ஏ.வி.எம் மஹால், வள்ளலார் நகர், திமிரி
✅ திமிரி வட்டாரம் – ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கொந்தங்கரை – வேப்பேரி ஊராட்சி
✅ சோளிங்கர் வட்டாரம் – சமுதாயக் கூடம், கரடிக்குப்பம்
✅ நெமிலி – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குட்டியம் (SHARE IT)

error: Content is protected !!