News September 27, 2024
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ( 27.9.2024 ) இன்று 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
Similar News
News December 12, 2025
கள்ளக்குறிச்சி: மணமகளுக்கு ரூ.25,000 சூப்பர் திட்டம்!

கள்ளக்குறிச்சி மக்களே.. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த மணமகளுக்கு ரூ.25,000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெற்றோர் தங்கள் மகளுக்கு திருமணம் நடத்தும் பொழுது மிகுந்த உதவியாக அமைகிறது. மேலும் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
News December 12, 2025
கள்ளக்குறிச்சியில் கல்வி உதவித்தொகை வேண்டுமா..?

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்டிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு <
News December 12, 2025
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியினை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பிரசாந்த் நேற்று(டிச.11) தொடங்கினார்.


