News April 14, 2025

இரவு ரோந்து பணி: போலீசார் விவரம் வெளியீடு…!

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், காவல் துறை சார்பில் 14.04.2025 அன்று இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோந்து பணிக்காக  1 முதல் 5 வரை மொத்தமாக 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் ஓர் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பொறுப்பாக உள்ளனர்.

Similar News

News December 23, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு !

image

ராணிப்பேட்டை மக்களே! உங்கள் மாவட்டத்திற்கான எரிவாயு உருளை நுகர்வோர்கள், விநியோகிக்கும் முகவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் வரும் டிசம்பர் 30ம் தேதி, மாவட்ட ஆட்சியார் அலுவகத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் சேவை குறைபாடுகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News December 23, 2025

ராணிப்பேட்டை: ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை!

image

ராணிப்பேட்டை, தக்கோலம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையத்தில் வீரராக ஜெய்பூரைச் சேர்ந்த சங்கர்லால் ஜாட் (30) பணியாற்றி வந்தார். இவர் நேற்று (டிச.22) சிஐஎஸ்எப் வளாகத்தில் உள்ள ஒரு அறையில், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தக்கோலம் போலீசார் வீரரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

News December 23, 2025

ராணிப்பேட்டை வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 1122 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பது நமது கடமை என்று மாவட்ட நிர்வாகம் செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி வருகின்ற டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

error: Content is protected !!