News November 22, 2024
இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய நவம்பர் 22ஆம் தேதி இரவு அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டது.
Similar News
News September 18, 2025
அமைச்சர் தலைமையில் முத்தரப்பு கூட்டம் தொடங்கியது!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.18) அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி, மேயர் ராமச்சந்திரன், மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, சேகோ சர்வ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News September 18, 2025
சேலத்தில் நாளை எங்கெல்லாம் முகாம்? முழு லிஸ்ட்!

சேலம், செப்டம்பர் 19 “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெறும் இடங்கள் லிஸ்ட் 1.மல்லமூப்பம்பட்டி: சாந்தி ராதாகிருஷ்ணன் திருமண மண்டபம், 2.மேட்டூர்: கற்பகம் திருமண மண்டபம், சதுரங்காடி3.ஓமலூர்: சமுதாயக்கூடம், செவ்வாய் சந்தப்பேட்டை சாலை 4.பனமரத்துப்பட்டி: கிராம செயலக அலுவலகம், குரங்கு புளிய மரம் 5.வாழப்பாடி: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, குமாரபாளையம் 6.சங்ககிரி: பார்வதி பாய் திருமண மண்டபம், சங்ககிரி
News September 18, 2025
சேலத்தில் இன்று கொட்டப்போகும் மழை; அலர்ட் மக்களே!

தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று(செப்.18) சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி,நீலகிரி என மொத்தம் 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே சேலம் மக்களே வெளியே செல்லும் போது கவனமாகவும், குடை எடுத்துச்செல்லவும் மறந்துடாதீங்க!