News March 25, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது வெளியிடப்பட்டுள்ளது. அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
Similar News
News September 16, 2025
தி.மலை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக செப்.,19ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தி.மலை மாவட்டத்தில் இன்று (செப்.,16) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரிய வையுங்கள்!
News September 16, 2025
தி.மலையில் உள்ளவர்களுக்கு குட் நியூஸ்!

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News September 16, 2025
554 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்க பரிந்துரை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி குழு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், அண்ணாமலையார் கோயில் மலையில் உள்ள 554 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பரிந்துரைத்தது.