News May 7, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்-30) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News November 22, 2025
இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை!

கிருஷ்ணகிரி, கட்டையான பல நூலக மைதானத்தில் நாளை (நவ.23) இயற்கை விவசாயிகள் நடத்தும் 194வது மரபுச் சந்தை நடைபெற உள்ளது. இதில் பாரம்பரிய அரிசி வகைகள், தானியங்கள், பசு நெய், தேன், அவல், ஊறுகாய், சிறு தானியங்களால் செய்த கேக், மருந்தில்லாமல் விளையும் காய்கறிகள் அனைத்தும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
News November 22, 2025
கிருஷ்ணகிரி: இலவச பட்டா வேண்டுமா? இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் உங்கள் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இதனை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 22, 2025
கிருஷ்ணகிரி: மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன்!

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 18-55 வயதுக்குட்பட்ட பெண்கள் & திருநங்கைகள் அரசு மானியத்துடன் 10 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் 25% அதிகபட்சம் 2 லட்சம் மானியம் பெற்று, வங்கி வழியாக கருவிகள் & தொழில்நுட்பங்களுடன் தொழில் தொடங்க முடியும். மேலும் தகவலுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் (அ) 04343-235567 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


