News March 25, 2025
இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (25/03/2025) செவ்வாய்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் காவல் அதிகாரிகள் விவரம் மற்றும் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Similar News
News November 5, 2025
அரியலூர் மாவட்டத்தில் இப்படி ஓர் இடமா ?

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் உள்ள மிக பெரிய சரணாலயங்களில் ஒன்றாகும். அக்டோபர் முதல் மே மாதம் வரை மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் இங்கு வந்து தங்கி செல்கின்றன. இங்கு கூழைக்கிடா, பாம்பு நாரை, மைல் கால் கோழி, வண்ண நாரை, மடையான், நாமக்கோழி, சிறைவி உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களை இங்கு காணலாம். ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
அரியலூர்: பேருந்து மோதி 93 வயது முதியவர் பலி

ஜெயங்கொண்டம் அருகே உள்ள வீராக்கன் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி பிச்சப்பிள்ளை (93). இவர் ஆமணக்கந்தோண்டியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து வந்தபோது அவருக்கு பின்னால் வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் பிச்சப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
அரியலூர்: படிவம் வழங்கும் பணி-ஆட்சியர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான கணக்கெடுப்பு படிவம் நேற்று முதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம், படிவம் வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர், அரியலூர் கோட்டாச்சியர், அரியலூர் வட்டாட்சியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


