News March 23, 2025
இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியீடு

இன்றைய இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் விவரங்களை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் எனவும் இரவு முழுவதும் காவல் அதிகாரிகள் ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் சென்னை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 30, 2025
டிட்வா புயல்: சென்னையில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்!

டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்கின்றது. நேற்று இரவு 11 மணிக்கு சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தனர். 13 நிவாரண மையங்களில் 1,058 பேர் தங்கியுள்ளனர், 5 லட்சம் பேருக்கு அரிசி தயார். 47 விமானங்கள் ரத்து; மழை இரவு முதல் அதிகரிக்கும். மக்கள் வெளியே வர வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 30, 2025
சென்னையை நோக்கி வரும் டிட்வா புயல்!

சென்னையில் இருந்து 260 கி.மீ தொலையில் டிட்வா புயல்புயல் நிலவி வருவதக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புயல் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சென்னைக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 30, 2025
மின் பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்கலாம்!

சென்னையை டிட்வா புயல் நெருங்கி வருவதால் மின்சாரம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு 24 மணிநேரமும் அழைக்கலாம் என தமிழக மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


