News May 7, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மே 1–ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

மாவட்ட அளவிலான வன உரிமை குழு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கல்வராயன் மலை பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு தனிநபர் வன உரிமைச் சான்று வழங்குவது தொடர்பான மாவட்ட அளவிலான வன உரிமை குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று (டிச.8) நடைபெற்றது. இதில் வனத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

News December 8, 2025

கள்ளக்குறிச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக வீரசோழபுரம் என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் வரும் டிசம்பர் 27.ம் தேதி அன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 8, 2025

கள்ளக்குறிச்சி: போலீஸ் SI-க்கே கொலை மிரட்டல்..!

image

கள்ளக்குறிச்சி: திருப்பாலபந்தல் காவல் நிலைய எஸ்.ஐ வேல்முருகன், நேற்று (டிச.8) அருதங்குடி புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மாரிமுத்து என்பவர், எஸ்.ஐ-யை பார்த்து ‘என் வண்டியை ஏன் மறிக்கிறீர்கள்?’ எனக் கேட்டு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த வழக்கில் இன்று (டிச.8) மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!