News April 3, 2025
இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவல் அதிகாரிகளின் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் மாவட்ட காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 3) இரவு ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு எண்கள் அரியலூர் மாவட்ட காவல்துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
Similar News
News November 3, 2025
அரியலூர்: 2 நாட்களில் 68 வழக்குகள் பதிவு

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காவல் துறையினர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டனர். அதன்படி பொது இடங்களில் மது அருந்திய குற்றத்திற்காக 34 வழக்குகளும், மது அருந்திவிட்டு வாகனம் இயக்கிய குற்றத்திற்காக 34 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனஅரியலூர் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
News November 3, 2025
அரியலூர் அருங்காட்சியகம் பற்றி ஓர் பார்வை!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரணவாசியில் புதைபடிவ அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் டைனோசர் முட்டைகள் மற்றும் பல புதைபடிவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அரியலூர் புவியியல் அமைப்பில் கடல் புதைபடிவங்கள் அதிகம் காணப்படுவதால், இந்த அருங்காட்சியகம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அருங்காட்சியகம், மாணவர்களுக்கு புவியியல் மற்றும் தொல்லியல் பற்றிய அறிவை மேம்படுத்த உதவுகிறது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
அரியலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!


