News October 9, 2024

இரவு நேர காவல்துறையினரின் தொலைபேசி எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 11, 2025

நாய்களுக்கு பிஸ்கட் கொடுத்து திருடிய திருடர்கள்

image

முள்ளக்காடு நேதாஜி தெருவை சேர்ந்த ரத்தினதுரை அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று இரவு இவரது கடையின் சட்டர்ன் ஒரு பகுதியை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.6000 மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளனர். மேலும் அப்பகுதியில் இருந்த நாய்கள் குரைத்ததால் அவைகளுக்கு பிஸ்கட் கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் பற்றி முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 11, 2025

தூத்துக்குடி: EB கட்டணம் அதிகமா வருதா?

image

தூத்துக்குடி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம் அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

தூத்துக்குடியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

தூத்துக்குடி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>MParivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்கமாக இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!