News March 31, 2024
இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் எவ்வித பதற்றமும் இல்லாமல் முறையாக தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஆட்சியர் கூறியுள்ளார்.
Similar News
News April 17, 2025
மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் தற்போது காலியாக உள்ள 87 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதில் 10ஆம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தங்கள் விண்ணப்பங்களை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 17, 2025
விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட ஆட்சியர்

12 வயது முதல் 21 வயது வரை உள்ள ஜூடோ வீரர்/வீராங்கனைகள் 28.04.2025 அன்று நடைபெறும் தேர்வில் ( Selection Trails ) பங்கு பெற்று பயன் பெற வேண்டுமாறும், மேலும் தகவல்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், மயிலாடுதுறை அலுவலகத்திலோ (அல்லது) 7401703459 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News April 17, 2025
மயிலாடுதுறை சிறப்பு பேருந்து இயக்கம்

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில் புனிதவெள்ளி மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறையொட்டி, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், மறுமார்க்கமாக மயிலாடுதுறைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.