News November 25, 2024
இரண்டு ரூபாய்க்கு வழக்கறிஞர் போராட்டம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, ரயில் நிலையம் சந்திப்பு வரை செல்லும் வழியில், தனியார் பேருந்து ஒன்றில் நேற்று பயணித்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் எனபவர், ரூ.8 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.10 கட்டணம் வசூலித்ததற்கு எதிராக போராட்டம் நடத்தினார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கூடுதலாக பெறப்பட்ட ரூ.2ஐ வழக்கறிஞிடம் திருப்பிக் கொடுத்தனர்.
Similar News
News November 25, 2025
கோவை: செம்மொழி பூங்காவின் அம்சங்கள்

முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ.25) திறப்பு செய்ய உள்ள “கோவை செம்மொழி பூங்காவின் சிறப்பம்சங்கள். 1) இந்தியாவின் முதல் உயர்தர தாவர உயிரியல் பூங்கா. 2) 23 தீம் தோட்டங்கள். 3) 1000 பேர் அமரக்கூடிய அரங்கு. 4) 100 ரோஜா வகைகள். 5) இயற்கை அருங்காட்சியகம். 6) திறந்த வெளி மாநாட்டு மையம். 7) சிறுவர் விளையாட்டு மையம். 8) பல்லடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.
News November 25, 2025
கோவை: ஐடிஐ, டிகிரி முடித்தவர்களுக்கு வேலைகள்!

1) பரோடா வங்கியில் வேலை -(https://bankofbaroda.bank.in/)
2) தமிழக சுகாதாரத்துறையில் வேலை-(mrb.tn.gov.in)
3) மத்திய உளவுத்துறையில் வேலை- (mha.gov.in)
4) ரயில்வேயில் 1,785 பேருக்கு வேலை -( rrcser.co.in)
5) சென்னை தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை -(clri.org)
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 25, 2025
கோவையில் இங்கெல்லாம் மின்தடை

கோவையில் இன்று (நவ.25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், ஆர்எஸ்புரம், ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டிபிசாலை, லாலி சாலை, தடாகம் சாலை, சுக்கிரவாரிபேட்டை, காந்திபார்க், சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமலை, நெகமம், ஆர்சிபுரம், ஜே.கிருஷ்ணாபுரம், வடசித்தூர் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின்விநியோகம் இருக்காது. (SHARE)


