News April 2, 2025
இரண்டு குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய் உயிரிழப்பு

தென்காசி, சேந்தமரம் அருகே உள்ள வலங்கப் புலி சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் மனைவி மகேஷ் (34) குடும்பத் தகராறு காரணமாக கடந்த 28ஆம் தேதி தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்துள்ளார். உடனடியாக மீட்க்கப்பட்ட அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
தென்காசி : இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு நவ.30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான காலக்கெடு இன்று டிச.1 வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து பயன்படி வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
வென்னிமலை முருகனுக்கு நாளை வருஷாபிஷேகம்

பாவூர்சத்திரம் வென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை (டிச.2) நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் கணபதி ஹோமம், யாகசாலை பூஜையும், 10.30 மணி முதல் 12 மணிக்குள் விமானம் மற்றும் மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 1 மணிக்கு அன்னதானமும், இரவு முருக பெருமான் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.


