News March 24, 2025
இரண்டு ஆண்டு சிறை அபராதம் ஆட்சியர் எச்சரிக்கை

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் குழந்தை திருமணச் சட்டம் 2006ன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணும் 21 வயது நிறைவடையாத ஆணும் திருமணம் செய்து கொண்டால் இதில் தொடர்புடையவர்களுக்கு சட்டப்படி குற்றம் என்றும் இதற்காக இரண்டு வருடம் சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 28, 2025
சேலம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திறனறிவு தேர்வு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாணவர்கள் இடையே அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில், விஞ்ஞான துளிர் அறிவியல் மாத இதழுக்கு மாநில அளவிலான துளிர் திறனறிதல் தேர்வு சேலம் மாவட்டத்தில் 68 தேர்வு மையங்களில் துவக்க நிலை பிரிவில் 712 மாணவர்களும், நடுநிலை 1,449 பேர், உயர்நிலை பிரிவில் 270 பேர், மேல்நிலை பிரிவில் 85 பேர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்திருந்தது.
News November 28, 2025
சேலம் மாநகர காவல்துறை எச்சரிக்கை

சேலம் காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: செய்தி, ஆன்லைன் கடன் ஆப்களில் அதிகரித்து வரும் மோசடிகளை முன்னிட்டு பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவித்துள்ளது. அறியாத பயன்பாடுகள் மூலம் கடன் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட தகவல்கள், அடையாள ஆவணங்கள், வங்கி விவரங்களை பகிர்வது பெரிய அபாயத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறியது. மேலும் இது குறித்து தகவல் அளிக்க 1930 தொடர்பு கொள்ளலாம்.
News November 28, 2025
ஒளவையார் விருது பெற தகுதியானவர் விண்ணப்பிக்கலாம்

ஒளவையார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பெண்களுக்கான ஒளவையார் விருது மகளிர் தினத்தில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் https// awards.tn.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர்-31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவிப்பு!


