News January 1, 2025
இரண்டாம் நாளில் எழுந்தருளிய சுவாமிகள்

ஸ்ரீவி.ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத நீராட்ட விழாவில் பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.2 ஆம் நாளான இன்று ஆண்டாள் ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் வடபத்ரசாயி சந்நிதி முன் உள்ள கோபால விலாசம் என்னும் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார்ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் மற்றும் பெரியாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
Similar News
News December 20, 2025
விருதுநகர் கலெக்டர் கார் மறிப்பு

விருதுநகர், வத்திராயிருப்பு அருகே கீழக்கோட்டையூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர கோரி 7 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில், இதுவரை கட்டித் தரப்படவில்லை. நேற்று முன்தினம் கலெக்டர் சுகபுத்ரா கோட்டையூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கிராமத்திற்கு வந்த கலெக்டரின் காரை மறித்த கிராம மக்கள் 5பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
News December 20, 2025
விருதுநகர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 20, 2025
விருதுநகர்: பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

காரியாபட்டி – நரிக்குடி சாலையில் தேனூர் விலக்கு பகுதியில் போதிய பேருந்து வசதிகள் செய்து தரவேண்டும் என வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் பள்ளி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து மாணவ, மாணவிகள் மறியலை கைவிட்டு பள்ளி சென்றனர்.


