News March 29, 2025
இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக அன்பழகன் பணிபுரிகிறார். இவர், 6 மற்றும் 8ம் வகுப்பு வரையில், பாடம் நடத்திய போது, வகுப்பறையில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறினர். இதையடுத்து பெற்றோர் அவர் மீது புகார் தெரிவித்தனர். அன்பழகனை, சி.இ.ஓ., கார்த்திகா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
Similar News
News April 3, 2025
ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <
News April 3, 2025
கள்ளக்குறிச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. திருக்கோவிலூர், சந்தைப்பேட்டை, தேவபாண்டலம், சங்கராபுரம், அரும்பாக்கம், தாழனூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
News April 3, 2025
கள்ளக்குறிச்சியின் பெயருக்கு பொருள் இதுவா?

கள்ளக்குறிச்சி, கோவிந்தராஜ பெருமாள் கோயில் கல்வெட்டு மற்றும் சிறுவங்கூர் கிராமத்து பெருமாள் கோயில் கல்வெட்டுகளில் “கல்லைக்குறிச்சி” என பொறிக்கப்பட்டுள்ளதாகவும், காலப்போக்கில் மருவி கள்ளக்குறிச்சி என பெயர் மாறியதாகவும் கூறப்படுகிறது. ‘கல்லை’ என்பது அங்கிருக்கும் கல்வராயன் மலையில் இருந்து வந்தது என்றும் ‘குறிச்சி’ என்பது மலைகள் சூழுந்த ஊர் என்பதை குறிக்கும் என்றும் கூறுகின்றனர். ஷேர் பண்ணுங்க