News April 27, 2025
இயலாக் குழந்தைகளுக்கு ரூ.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு

செங்கல்பட்டு: இயலாக் குழந்தைகளுக்கு கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் சிகிச்சை தொடர்பான கருவிகள் வாங்க, கனிமவள நிதி 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு கலெக்டர் அறிவுறுத்துள்ளார்.
Similar News
News April 28, 2025
செங்கல்பட்டில் அரசு வேலை: நாளை கடைசி நாள்

செங்கல்பட்டு அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 154 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து நாளை(ஏப்.29) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 28, 2025
வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகை திருட்டு

மறைமலை நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணா (60). விவசாயியான இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் மற்றும் பின் கதவை பூட்டி விட்டு தூங்க சென்றார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 22 சவரன் நகைகள் திருடுபோனது தெரிய வந்தது. புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 27, 2025
மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

கல்பாக்கம் அடுத்த வசுவசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் இவர் தனது வயலில் நீர் பாய்ச்சுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது செய்யூர் எம்.எல்.ஏ., பனையூர் பாபுவுக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி, குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.