News March 24, 2025
இயற்கை எழில் கொஞ்சும் புளியஞ்சோலை

வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் நீரோடைகளும், சிற்றருவிகளும் நிறைந்த பசுமையான மற்றும் ஓர் அழகான சுற்றுலா இடம் புளியஞ்சோலை. கொல்லிமலைகளின் உச்சியில் ”தட்சினகங்கா” என்று அழைக்கப்படும் நீர்வீழ்ச்சியின் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர், புளியஞ்சோலையை அடைந்து, காவிரியின் துணை நதியான கொள்ளிடத்தில் இணைகிறது. இது ஒரு வற்றாத நீரோடையாகும். இந்த லீவுக்கு மறக்காம இங்க போங்க. உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News August 9, 2025
திருச்சி பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

திருச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வாராந்தர தேர்வுகள் வரும் ஆக.,11-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதனை பள்ளி பாடவேளையில் நடத்த கூடாது. மாறாக இதனை சிறப்பு வகுப்பு நேரம், உணவு இடைவேளை நேரம் மற்றும் காலை நேரத்தில் நடத்த வேண்டும் என திருச்சி மாவட்டக்கல்வி அலுவலர் இன்று அறிவுறுத்தியுள்ளார்.
News August 9, 2025
திருச்சி மக்களே இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இந்த எண்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News August 9, 2025
திருச்சி: சுகாதாரத் துறையில் வேலை

திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம், மாவட்டத்தில் காலியாக உள்ள 143 செவிலியர், 11 ஆய்வக நுட்புநர், 5 மருந்தாளுநர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வரும் ஆக.,21-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க..