News June 27, 2024
இயற்கை ஈடு பொருட்கள் தயாரிக்க ரூ.1 லட்சம் மானியம்

தேனி மாவட்டத்தில் இயற்கை ஈடு பொருட்களான பஞ்சகாவியம், மூலிகை பூச்சிவிரட்டி, வேப்பம் புண்ணாக்கு தயார் செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவை தயாரிக்க மாவட்டத்தில் 3 விவசாய குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உள்ளது. அதில் சின்னமனுார், க.மயிலாடும்பாறை, போடி ஆகிய 3 வட்டாரங்களில் தலா 12 முதல் 20 பேர் கொண்ட விவசாயிகள் அடங்கிய குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 21, 2025
தேனி: பைக்கில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

கூடலூரை சேர்ந்தவர் பாக்கியம் (60). இவர் நேற்று (நவ.20) அவரது உறவினரின் பைக்கில் பின்னால் அமர்ந்து வீரபாண்டி கோவிலுக்கு சென்றுள்ளார். உப்பார்பட்டி விளக்கு அருகே பைக் வந்து கொண்டிருந்த போது திடீரென பாக்கியம் மயங்கி பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு.
News November 21, 2025
தேனி: ரிப்போட்டருக்கு கொலை மிரட்டல்

போடி பகுதியை சேர்ந்தவர் வினோத்பாபு. இவர் ஒரு நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் போடியை சேர்ந்த மணிமாறன் (52), என்பவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டு அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில் மணிமாறன் வழக்கை வாபஸ் பெறுமாறு வினோத்பாபுவை தகாத வார்த்தையால் பேசி, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து போடி போலீசார் மணிமாறன் மீது வழக்கு (நவ.20) பதிவு.
News November 21, 2025
தேனி: தேர்வு இல்லை.. வானிலை மையத்தில் வேலை ரெடி

தேனி மக்களே, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரு.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க <


