News March 26, 2025

இயற்கை அழகு நிறைந்த மேலகிரி மலைகள்

image

மேலகிரி மலைகள், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு வனப்பகுதி ஆகும். பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்ற இந்த மலைகள் சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இருக்கும். மேலும், செல்லும் வழி எங்கும் பனி மூட்டம் சூழ ரம்மியமாக காட்சியளிக்கும் மேலகிரி மலைகள் வெளிநாடுகளுக்கு டிரக்கிங் செல்லும் அனுபவத்தை நமக்கு தருகின்றன. இந்த செய்தியை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News October 28, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமீப காலமாக அதிக அளவில் கொள்ளை சம்பவம் அரங்கேறி வருகிறது. பேருந்து பயணத்தின் போது ஜன்னல் வழியாக பயணிகள் கை கால் தலைகளை நீட்டாதீர்கள் உங்களுடைய கவனக்குறைவால் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை பயன்படுத்தி திருடர்கள் உங்களிடம் இருந்து தொலைபேசி நகை பணம் கொள்ளை அடிக்க வாய்ப்புள்ளது என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

News October 28, 2025

கிருஷ்ணகிரி சுற்றுப் பகுதியில் நாளை மின்தடை

image

கிருஷ்ணகிரி 110/33-11 கேவி துணை மின் நிலையத்தில் நாளை (அக்.29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு, கலெக்டர் அலுவலகம், கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி அணை, சுண்டேகுப்பம், ஆலப்பட்டி, மிட்டப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

News October 28, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அக்.27 இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!