News June 28, 2024
இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அதிமுக ஒருங்கிணைப்பு குழு மீதும், தன் மீதும் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக இபிஎஸ் மீது கோவை கோர்ட்டில் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் வழக்கு மீதான விசாரணையை வரும் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Similar News
News November 18, 2025
காரமடை கோயில் இடிப்பு? பக்தர்கள் கொந்தளிப்பு!

கோவை: காரமடை நகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோயில் உள்ளது. ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் ஓரம் ஒதுக்குப்புறமாக உள்ள கோயிலின் ஒரு பகுதி நெடுஞ்சாலை துறை பகுதியில் உள்ளது. இப்பகுதியை கோயில் நிர்வாகம் இடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு பல தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்!

கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை இணைந்து பிறப்பு மற்றும் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (நவ.18) கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடைபெற உள்ளது. பெற்றோர் இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தி உள்ளார்.