News January 2, 2025
இபிஎஸை சந்தித்த செல்லூர் ராஜு

மதுரை செல்லூர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்டக் கழகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் சேலம் சென்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று (ஜன.02) நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து பிரம்மாண்ட வேல் மற்றும் மாலை அணிவித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Similar News
News November 24, 2025
மதுரை அருகே செப்டிக் டேங்கிற்குள் விழுந்த பசு மாடு மீட்பு

மேலூர் மதுரை சாலையில், செக்போஸ்ட் அருகே அரசு கலைக் கல்லூரியில் உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த வளாகத்தில், போதிய சுற்று சுவர் இல்லாததால் வெளி நபர்கள் மற்றும் கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்க்குள் பசுமாடு ஒன்று விழுந்தது. தகவல் அறிந்த மேலூர் தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
News November 24, 2025
மதுரை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News November 24, 2025
மதுரை: வியாபாரிகள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு

மதுரை மாவட்டம் தபால்தந்தி நகர் பாமா நகர் பகுதியில் காய்கறி சந்தை இயங்கி வந்தது. இந்நிலையில் மாநகராட்சி அந்த காய்கறி சந்தைக்கு அனுமதி மறுத்தது. இதனால் நேற்று வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகளின் சமரசத்தை வியாபாரிகள் ஏற்காத நிலையில் போலீசார் கைது செய்தபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


