News April 11, 2025
இன்ஸ்டா காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

பட்டியூர் பகுதியில் காதல் ஜோடி நேற்று (ஏப்ரல் 10) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், லத்தேரியைச் சேர்ந்த மணிகண்டனுக்கு (27) ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த இவர், கோகிலா (24) என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து கொண்டார். பெண் வீட்டார் பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
Similar News
News November 28, 2025
வேலூர்: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து வேலூர் மாவட்டம், காட்பாடி கன்ட்ரோல்மென்ட் மற்றும் திருவண்ணாமலை வழியாக ராமேஸ்வரத்திற்கு வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரயில் (டிசம்பர் 2,3,9,10,11) தேதிகளில் சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த வாராந்திர சிறப்பு இரயில் (06080) கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் ஆன்மீக பக்தர்கள் வசதிக்காக இந்த இரயில் இயக்கப்படுவதாக இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 28, 2025
வேலூர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

வேலூர் கொணவட்டத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் தனியார் மருத்துவமனை ஊழியர். இவரது பைக் கடந்த 19-ம் தேதி தனது வீட்டின் அருகே நிறுத்தியிந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் பைக் திருடிய ஸ்ரீகாந்த் (22), ஜெய்கணேஷ் (22) பிரகாஷ் (18) 3 பேரை கைது செய்தனர். மேலும் 9 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
News November 28, 2025
வேலூர்: SIR லிஸ்ட் ரெடி – உடனே CHECK பண்ணுங்க!

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு. 1.<


