News January 3, 2025

இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

image

ராமநாதபுரத்தில் சுமார் 398982 அரிசி அட்டை தாரர்களுக்கு இன்று முதல் பொங்கள் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப்பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும் இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர். *ஷேர்*

Similar News

News November 6, 2025

ராமநாதபுரம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஜீவா நகர் நெசவாளர் பயிற்சி மையத்தில் இளைஞர்களுக்கான நெசவாளர் பயிற்சி முகாம் துவங்கப்பட்டுள்ளது. இதில் 18 வயது முதல் 28 வயது வரையிலான ஆண், பெண் நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பயிற்சி முடிந்தவுடன் ஊக்கத்தொகை, திறன் மேம்பாட்டு மையம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும் என கைத்தறி உதவி இயக்குனர் சேரன் தெரிவித்தார்.

News November 6, 2025

ராம்நாடு: போட்டி தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த லிங்கை<> கிளிக் செய்து<<>> எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த லிங்கை தேர்வுக்கு தயாராகும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 6, 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் (நவ. 5) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!