News April 5, 2025
இன்று மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம்

விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில், பொதுமக்கள் மின் மீட்டர் பழுது, மாற்றம், குறைந்த மின்னழுத்தம், மின் கட்டண பிரச்னை, சேதமடைந்த கம்பங்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். இந்த முகாம், செஞ்சி, கண்டமங்கலம், திண்டிவனம் மின் செயற்பொறியாளர்கள் அலுவலகத்தில் நடைபெறும்.
Similar News
News April 8, 2025
ரூ.1 லட்சம் வரை சம்பளம்; எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)மூலம் மேனேஜர், நிறுவன செயலாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் <
News April 8, 2025
வதந்தியால் பாதிக்கப்படும் விவசாயிகள்

திருவம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழாண்டு அதிகளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.பழங்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில்,ரசாயனம் கலப்படம் தொடர்பான வதந்தியால் தர்பூசணியை கொள்முதல் செய்ய யாரும் முன்வராத நிலை உருவாகி உள்ளது. அதனால் நிலத்தில் அழுகிய நிலையில் உள்ள தர்பூசணிகளை அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.
News April 8, 2025
ஆட்சியர் அலுவலகத்தில் பைக் திருட்டு

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முட்டத்தூர் தனியார் நிறுவன ஊழியர் குமார் தனது பல்சர் பைக்கில் வந்தார். பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்று திரும்பிய சில நிமிடங்களில் பைக் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் அரங்கேறிய இந்த திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.