News April 5, 2025
இன்று மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மின் பகிர்மான கோட்டங்களில் இன்று மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம், இன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய கோட்டங்களில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் முகாம்கள் நடக்க உள்ளன. சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் தொடர்பான குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும் என மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 12, 2025
கள்ளக்குறிச்சி: பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

அரசம்பட்டை பகுதியைச் சேர்ந்த அய்யம்மாள், குபேந்திரன் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள். இவர்களுக்கிடையே இடப் பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி வாக்குவாதம் இருந்து வரும் நிலையில், அய்யம்மாள் வீட்டில் இருந்தபோது குபேந்திரன் தன்னுடைய இடத்தில் 2 அடி சேர்த்து கழிவறை கட்டியதாக கூறி, அய்யம்பாளை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News December 12, 2025
கள்ளக்குறிச்சி கலெக்டர் பங்கேற்கிறார்…!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் ஏற்பாட்டில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா இன்று(டிச.12) காலை 10 மணி அளவில் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்துகொள்கிறார்.
News December 12, 2025
கள்ளக்குறிச்சி: சிறுமியுடன் காதல் திருமணம்.. கணவருக்கு போக்சோ!

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், பிரியாணி கடையில் மேலாளராக பணியாற்றி வரும் வாலிபரும் ஒரு வருடமாக காதலித்து இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட நிலையில், சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இது தொடர்பாக மகளிர் ஊர் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில், குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


