News May 8, 2025
இன்று மாலை முதல் தடை உத்தரவு – ஆட்சியர்

பாஞ்சாலங்குறிச்சியில் வீர ஜக்கம்மாள் தேவிஆலய திருவிழாவினை முன்னிட்டு பொது அமைதியை நிலைநாட்டும் வகையில், விழா அமைதியாக நடைபெற, ரக்ஷா சன் ஹிதா 163 (1) சட்டப்படி, இன்று மாலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 14, 2025
தூத்துக்குடி: 46 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்.. டிஐஜி உத்தரவு!

நெல்லை காவல் சரகம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 46 இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் மாற்றம் செய்து நெல்லை காவல் சரக பொறுப்பு டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டுள்ளார். இதில், தூத்துக்குடி மத்திய பாகம், வடபாகம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், முறப்பநாடு, புதூர், ஆழ்வார்திருநகரி, நாலாட்டின் புதூர் ஆகிய பகுதிகளுக்கு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News December 14, 2025
தூத்துக்குடி: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வீடு தேடிவரும் ரேஷன் பொருட்கள் திட்டமான தாயுமானவர் திட்டத்தின் கீழ் 43,476 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்றுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்தார். 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் ஒரு நபர் மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் இதில் பயன் பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 14, 2025
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


