News October 24, 2024

இன்று நடைபெற இருந்த போலியோ ஒழிப்பு பேரணி ஒத்திவைப்பு

image

திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று உலக போலியோ தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் பகுதியில் போலியோ ஒழிப்பு பேரணி நடைபெறுவதாக இருந்த பேரணி தொடர் மழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என திருப்பத்தூர் ரோட்டரி மாவட்ட ஆளுநர் M. ராஜன்பாபு தகவல் தெரிவித்துள்ளார். 

Similar News

News January 7, 2026

FLASH: திருப்பத்தூர்: கிணற்றில் தொங்கிய ஆண் சடலம்!

image

வாணியம்பாடி அடுத்த கொங்கன் வட்டம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தூக்கிலிடப்பட்ட நிலையில் கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வாணியம்பாடி கிராமிய போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனடிப்படையில் வாணியம்பாடி போலீசார் உடலை மீட்டு, தற்கொலையா? கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 7, 2026

திருப்பத்தூர்: டிகிரி போதும்; ரூ.1.7 லட்சம் சம்பளம்- APPLY

image

1. இந்திய ராணுவத்தில் 381 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2. கல்வி தகுதி: B.E/B.Tech (ம) ஏதேனும் ஓர் டிகிரி, இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 3. மாத சம்பளம் ரூ.56,100 – 1,77,500 வழங்கப்படும். 4. விருப்பமுள்ளவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். 5. கடைசி நாள்: பிப்.5. இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு. ஷேர் செய்யவும்.

News January 7, 2026

திருப்பத்தூர்: RTO அலுவலகத்தில் விழிப்புணர்வு முகாம்

image

திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று (ஜன.7) 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவசர காலத்தில் பொதுமக்களுக்கு முதலுதவி அளிப்பது மற்றும் அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!