News August 9, 2024
இன்று ஓடிடியில் வெளியான படங்கள்

கமல் நடித்த ‘இந்தியன் 2’ திரைப்படம், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் தென்னிந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படம் இந்தியாவில் சர்ச்சையான நிலையில், வெளிநாடுகளில் மட்டும் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் இன்று Stream ஆகியுள்ளது. சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்த ஹாரர் படமான ‘7ஜி’, ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது. மேலும், சில மாற்று மொழி படங்களும் வெளியாகியுள்ளன.
Similar News
News November 14, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹3,000 குறைந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹3 குறைந்து ₹180-க்கும், கிலோ வெள்ளி ₹3,000 குறைந்து ₹1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் வெள்ளி விலை ₹10,000 அதிகரித்த நிலையில், இன்று ₹3,000 மட்டுமே குறைந்துள்ளது.
News November 14, 2025
பிஹார் தேர்தல் விஜய்க்கு பாடமாக அமையுமா?

பிஹார் தேர்தலில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, தற்போதைய நிலவரப்படி 3 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இருபெரும் கூட்டணிகள் போட்டியிடும் தேர்தல் களத்தில், புதிய கட்சிகளின் நிலையை இது காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதே பிரசாந்த் கிஷோர் தான் விஜய்யின் தவெகவுக்கும் தேர்தல் வியூக வகுப்பாளராக உள்ள நிலையில், விஜய் இந்த விஷயத்தை யோசிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர்.
News November 14, 2025
பிஹார் 2020 தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தன?

பிஹார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் JD(U) – BJP கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா, MGB கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பது இன்று மதியத்திற்குள் தெரிந்துவிடும். கடந்த 2020 தேர்தலில் BJP – 74, JD(U) – 43, RJD – 75, INC – 19 தொகுதிகளில் வெற்றிபெற்றன. இம்முறை, NDA கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. உங்கள் கணிப்பு என்ன?


