News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

கிருஷ்ணகிரி சந்திர சூடேஸ்வரர் திருக்கோவில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம், கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News March 6, 2026
கிருஷ்ணகிரியில் துடிதுடித்து பலி

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இந்தர்ஜித் அவருடைய நண்பர் நிரஞ்சன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடிரென இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து சாலையில் தவறி விழுந்தது. இதில் நிரஞ்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தர்ஜித் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 6, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 5, 2026
கிருஷ்ணகிரி இளைஞர்கள் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் StartupTN மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து “Beauty Tech Hackathon 2026” போட்டியை நடத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு, தரவில் பகுப்பாய்வு, சலூன் தானியக்கம், வாடிக்கையாளர் அனுபவ தொழில்நுட்பம் உள்ளிட்ட 6 துறைகளில் புதுமையான தீர்வுகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்கால தொழில்முனைவோர், மாணவர்கள், டெவலப்பர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் அழகு துறை நிபுணர்கள் பங்கேற்கலாம்


