News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

செங்கல்பட்டு வேதகிரீஸ்வரர் கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம், கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News October 14, 2025
செங்கல்பட்டு: TNSTC சூப்பர் அறிவிப்பு… APPLY!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. BE பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். <
News October 14, 2025
செங்கல்பட்டு: சாலையை கடக்க முயன்றவர் பலி

சிங்கபெருமாள் கோவில் அடுத்த தெள்ளிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு,(52) ‘டைல்ஸ்’ ஒட்டும் வேலை பார்த்து வந்தார். ஸ்ரீபெரும்புதுார் – சிங்கபெருமாள் கோவில் சாலையில், தெள்ளிமேடு பேருந்து நிறுத்தம் அருகில், பாலு சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, திருவள்ளூரில் இருந்து சிங்கபெருமாள் கோவில் நோக்கி சென்ற ‘யமஹா எம்.டி.,’ பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜாக்கிரதையா சாலையை கடந்து செல்லுங்க.
News October 14, 2025
திருப்போரூரில் மாட்டால் நிகழ்ந்த மரணம்!

திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டைச் சேர்ந்த கண்ணன் (42) என்பவர், கடந்த 9-ஆம் தேதி வேலைக்குச் சென்றபோது, காலவாக்கம் அருகே மாடு குறுக்கே ஓடியதால், அவரது பைக் நிலைதடுமாறி தடுப்புச் சுவரில் மோதியது. விபத்தில் படுகாயமடைந்த கண்ணன், நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.