News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும், சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் மற்றும் கேது தோஷம் நீங்கி நிவர்த்தி பெறலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 2, 2025
டிட்வா புயல்: திருவள்ளூர் மக்களுக்கு முக்கிய எண்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. மேலும், சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இவ்வாறு மழையால் சிரமம், புகார்களை தெரிவிக்க 044-27664177, 044-27666746 என்ற எண்ணை அழைக்கலாம். மேலும் வாட்ஸ் ஆப் மூலம் 9444317862, 9498901077 புகார் அளிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க
News December 2, 2025
திருவள்ளூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.2) விடுமுறை அளித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 2, 2025
திருவள்ளூர்: இரவு நேர ரோந்துக் காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(டிச.1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


