News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE செய்யவும்.
Similar News
News November 21, 2025
நாளை மதுரை வரும் துணை முதல்வர்

நாளை மதுரைக்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாணவர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. மதுரை மாநகர் திமுக இளைஞரணி செயலாளர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் தளபதி எம்எல்ஏ ஆலோசனையின்படி அழகர் கோவில் சாலையில் உள்ள மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார் ஏராளமான இளைஞர் அணியினர் பங்கேற்றனர்.
News November 21, 2025
மதுரை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
மதுரை வடக்கு: 0452-2532501
மேற்கு: 0452-253250
மத்தி: 0452-253250
கிழக்கு: 0452-2532501
மேலூர்: 0452-2415222
வாடிப்பட்டி: 04543-254241
உசிலம்பட்டி : 04552-252192
திருமங்கலம் : 0452-280759
பேரையூர் : 0452-275677
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News November 21, 2025
மதுரை: சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது போக்சோ

திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் செந்தில் மகன் திருப்பதி(26). இவர் 17 வயது சிறுமியை கோவில் ஒன்றில் வைத்து பெற்றோருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதில் சிறுமி இரண்டரை மாத கர்ப்பமானார். மகளிர் ஊர்நல அலுவலர் பத்மா இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் திருப்பதியை இன்று கைது செய்தனர்.


