News April 26, 2025

இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE செய்யவும்.

Similar News

News October 14, 2025

மாநகராட்சியுடன் கண் மருத்துவமனை ஒப்பந்தம்

image

மதுரை மாநகராட்சி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் பள்ளியில் கண் மருத்துவ பரிசோதனை செய்தது. இதில் 226 மாணவர்களுக்கு பார்வை குறைபாடு இருப்பது தெரிந்தது. அவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது, இதன் தொடர்ச்சியாக கண் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பரிசோதனை இலவச கண் கண்ணாடிகள் வழங்க மாநகராட்சியுடன் ஒப்பந்தத்தில் மருத்துவமனை டாக்டர் விஜயலட்சுமி கையெழுத்திட்டார்.

News October 14, 2025

மதுரையில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனியில் இன்று (அக்.14) முதல் அக். 20 வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

மேலூர் அருகே மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி

image

மதுரை மாவட்டம் மேலுார் அருகே கருத்தபுளியம்பட்டியைச் சேர்ந்த அர்ஜுன் (21) என்பவர், கல்லம்பட்டியில் வீட்டு வேலை செய்யும் போது, மின்சார வயரில் கம்பி அறுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (அக். 13) மதியம் நிகழ்ந்தது. மேலுார் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!