News April 26, 2025

இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

காளஹஸ்வரர் கோவிலில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News October 27, 2025

பழனி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

image

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள மானூறை சேர்ந்தவர் ஈஸ்வரன் வயது (27). இவர் கீரனூரில் இருந்து தன்னுடைய சொந்த ஊரான மானுருக்கு இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது நரிக்கல்பட்டி அருகில் உள்ள தயிர் சாலை என்னும் இடத்தில், எதிரில் வந்த நான்கு சக்கர வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்தில் பலியானார். தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 27, 2025

வங்கிக் கடன் என கூறி வரும் அழைப்புகள் – எச்சரிக்கை

image

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி குறைந்த வட்டியில் உடனடி கடன் வழங்குவோம் என தெரிவிக்கும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம். “0% வட்டி”, “KYC புதுப்பிக்கவும்” என கூறி OTP, வங்கி விவரங்கள் கேட்பது சைபர் மோசடி. ஏமாறினால் உடனே 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம். – திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News October 27, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை இன்று காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!