News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும், சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் மற்றும் கேது தோஷம் நீங்கி நிவர்த்தி பெறலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 6, 2025
காஞ்சிபுரம்: குழந்தை வரம் அருளும் முக்கிய தலம்!

காஞ்சிபுரம், திருப்புட்குழியில் விஜயராகவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இத்தலத்துக்கு வந்து ஜடாயு தீர்த்தத்தில் நீராடி இரவில் வறுத்த பயிறை மடியில் கட்டிக் கொண்டு வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

காஞ்சிபுரம்: போராட்டத்தில் 151 பேர் கைது

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் (TNGOSA) சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் மறியலில் ஈடுபட்ட மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 151 பேர் கைது செய்யப்பட்டனர்.