News September 15, 2024
இன்று அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

பேரறிஞர் அண்ணாவின் 116ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, இன்று அதிமுக சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே காந்தி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அதிமுக மகளிர் அணி செயலாளர் வளர்மதி சிறப்புரை ஆற்ற உள்ளார். இதில், அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News July 8, 2025
உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை . சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள் <
News July 8, 2025
செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு

வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு, காங்., கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக பேசிய செல்வப்பெருந்தகை, முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடாது என்பதற்காக மக்களோடு மக்களாக சாமி தரிசனம் செய்தேன்” எனத் தெரிவித்தார்.
News July 7, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (07.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.