News November 13, 2024
இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்
நாமக்கல், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில் மூன்று நிலை ராஜகோபுரம் கட்டும் பணிக்கு காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். கொல்லிமலை அறப்பளீஸ்வரர்கோயிலில், 3 நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று புதன்கிழமை (13/11/24) காலை 9:15 மணிக்கு மேல் 10:15 மணிக்குள் நடைபெறுகிறது.
Similar News
News November 19, 2024
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – செல்வராஜ் (9498153088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
News November 19, 2024
முத்தங்யிகில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம், பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
News November 19, 2024
வாகனங்கள் பொது ஏலம்
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு துறையின் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகின்ற 27-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம், நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.