News October 24, 2024

இன்றும் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் (இன்று) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!

Similar News

News October 19, 2025

கரூர்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில், நவம்பர் மாதத்துக்கான ரேஷன் அரிசியை தற்போது (அக்டோபர் மாதத்தில்) பெறலாம் என ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக பொதுவினியோக திட்ட அட்டையாளர் குடும்பங்கள் சிரமம் அடையாத வகையில் அரிசியை இம்மாதத்திலேயே பெறலாம் என தெரிவித்துள்ளார். அக்டோபர் மாத அரிசியை பெற்றிருந்தாலும், பெறாதவர்களும் நவம்பர் மாத ஒதுக்கீட்டை இம்மாதமே பெறலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News October 19, 2025

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில் வேளாண் விளைபொருட்களுக்கான மதிப்புக்கூட்டல் அலகுகளை அமைப்பதற்கு மானியம் வழங்கப்படும் என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதற்காக 2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், ஒரு கோடி ரூபாய் இலக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இந்த மானியத்தைப் பெற 9489508735, 9500416678, 9942286337 அழைக்கவும்.

News October 19, 2025

சின்னதாராபுரத்தில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

image

சின்னதாராபுரம் அமராவதி ஆற்று பாலத்தில் கீழ், மேகலா என்பவர் துணிகளை துவைத்து கொண்டு குளிக்க சென்றுள்ளார். இவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பிறகு தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சின்னதாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

error: Content is protected !!