News August 3, 2024
இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 3, 4) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்தாலும், இரவில் மழை பெய்து வருவதால் குளிச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 4, 2025
செங்கல்பட்டு: நடுபழநிக்கு இப்படி ஒரு சிறப்பா?

செங்கல்பட்டு அச்சிறுபாக்கம் பெருக்கரணையில் மரகத தண்டாயுதபாணி (நடுபழநி) திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகன் சிலை மரகத கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகர் பழநி தண்டாயுதபாணியை போலவே இருப்பதால் ‘நடுபழநி’ என இக்கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் வங்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 4, 2025
செங்கல்பட்டு: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
செங்கல்பட்டு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணி

செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணி தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்களின் ஆலோசனை கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் கியூரி தலைமையில், திம்மாவரத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், ‘வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்களை ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், இன்று துவங்கி, வரும் டிச., 4ம் தேதி வரை, வீடு வீடாகச் சென்று வழங்குகின்றனர்.


