News August 7, 2025
இன்பநிதி- மணிரத்னம் காம்போவில் புதிய படம்?

DCM உதயநிதியின் மகன் இன்பநிதி விரைவில் கோலிவுட்டில் கால் பதிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குவதற்காக பல முன்னணி இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ் போன்றவர்களின் பெயர் அடிபட்ட நிலையில், இந்த லிஸ்ட்டில் மணிரத்னம் பெயரும் இணைந்துள்ளது. லண்டனில் படிப்பை முடித்து திரும்பும் இன்பநிதி, உடனடியாக ஷூட்டிங்கில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News December 11, 2025
கார் விபத்தில் நடிகை மரணம்

The Marvelous Mrs Maisel (amazon prime), நியூ ஆம்ஸ்டர்டாம் படங்களில் நடித்து பிரபலமான நடிகை வென்னே ஆல்டன் டேவிஸ் (60) கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். நியூயார்க்கில் சாலையை கடக்க முயன்றபோது டேவிஸ் மீது எதிரே வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News December 11, 2025
சென்னையில் 36 இண்டிகோ விமானங்கள் ரத்து

DGCA-வின் <<18476353>>புதிய விதிமுறைகளை<<>> நடைமுறைப்படுத்த முடியாமல் திணறி வரும் இண்டிகோ, இன்றும் பல விமானங்களை ரத்து செய்துள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து புறப்படும்(24), மற்றும் சென்னைக்கு வரும்(12) 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று 70 விமானங்கள் ரத்தான நிலையில், அது தற்போது பாதியாக குறைந்துள்ளது கவனிக்கதக்கது. விரைவில் நிலைமை முற்றிலும் சீராகும் என இண்டிகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 11, 2025
திமுகவை வைத்து வளர நினைக்கும் விஜய்: DMK

சமீபத்தில் நடந்த புதுச்சேரி கூட்டம் உட்பட, தொடர்ந்து விஜய் திமுகவை தாக்கி பேசிவருவதற்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். எல்லா கட்சிகளுமே திமுகவையே போட்டியாக நினைப்பதாகவும், அதன் மூலம்தான் தாங்கள் வளர முடியும் என்றும் அவர்கள் குறிக்கோளுடன் இருக்கிறார்கள் எனவும் பேசியுள்ளார். ஆனால் திமுகவை வீழ்த்த வேண்டும் என்கின்ற அவர்களது கனவு ஒருபோதும் பலிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.


