News April 5, 2025
இன்சூரன்ஸ் வெரிஃபிகேஷன் ஆபிசர் வேலை

சென்னையில் உள்ள AYU ஹெல்த் அலைடு சர்வீசஸ் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் வெரிஃபிகேஷன் ஆபிசர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இளங்கலை படிப்பில் டிகிரி பெற்ற 21 – 50 வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். முதல்முறையாக வேலை தேடுபவர்களும் இந்த <
Similar News
News December 5, 2025
சென்னை: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணி நடப்பதால், டிசம்பர் 5 முதல் 15 வரை, உழவன், அனந்தபுரி, சேது மற்றும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தாம்பரத்தில் பயணத்தை முடிக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்க்கத்தில் இதே ரயில்கள் தாம்பரத்தில் இருந்தும், மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ் (22158) சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News December 5, 2025
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு!

சென்னையில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மழை முற்றிலும் குறைந்த நிலையில், 2 ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, சென்னை மாவட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் நாளை செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். புதன்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 5, 2025
சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறும் தேதி அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சி நடைபெறும்.நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் & பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி), தமிழக அரசு உதவியுடன் நடத்தி வருகிறது. அதன்படி, புத்தகக் காட்சி வரும் ஜன.7-ஜன.19 வரை 12 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த முறை 900 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


