News December 31, 2024
இந்த புத்தாண்டை Way2News உடன் கொண்டாடுங்கள்

புத்தாண்டை முன்னிட்டு நீங்கள் உங்கள் வீடுகளில் போடும் அசத்தலான கோலங்களை Way2News-இல் பதிவிடலாம். நீங்கள் போடும் கோலங்களை உங்கள் பெயருடன் போட்டோ எடுத்து, உங்கள் பெயர், மாவட்டம், தாலுகா, கிராமம் உள்ளிட்ட விவரத்தை பதிவிட்டு, அனுப்பி வைக்கவும். இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? என்ற விவரம் மேலே உள்ள வீடியோவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டை way2news உடன் கொண்டாடி மகிழுங்கள்.
Similar News
News October 19, 2025
கடலூர்: கரண்ட் கட்டா? ஒரு Phone போதும்!

கடலூர் மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 19, 2025
கடலூர்: அனுமதி இன்றி பட்டாசு விற்றவர் கைது

நடுவீரப்பட்டு பகுதியில் அரசின் அனுமதி இன்றி கடைகளில் பட்டாசு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் இன்று (அக்.19) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுமார் ரூ.10,000 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, விற்பனையில் ஈடுபட்ட பிரபாகரன் (54) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
News October 19, 2025
கடலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது.