News February 27, 2025
இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள 109 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து தபால் வழியாக அனுப்ப வேண்டும்.
Similar News
News April 21, 2025
தி.மலை ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஏப்ரல்.21) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News April 21, 2025
புத்திர பாக்கியம் அருளும் வாலீஸ்வரர்

தி.மலை, குரங்கணில் மூட்டலில் அமைந்துள்ளது அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில். இங்கு சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சாமி மீது சூரிய ஒளி விழுகிறது. பாவ விமோசனம் பெற, சனி தோஷம் நீங்க இங்கே வழிபடலாம். திருமணம் முடிந்தவர்களும் கர்ப்பிணி பெண்களும் இங்கு உள்ள அம்பாளுக்கு வளையல் அணிவித்து பின் அதை அணிந்து கொள்கின்றனர். இதன் மூலம் புத்திர பாக்கியமும் சுகப்பிரசவமும் நடக்கும் என்பது நம்பிக்கை.
News April 21, 2025
கொளுத்தும் வெயில் தப்பிக்க எளிய டிப்ஸ்

திருவண்ணாமலையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS,எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க